‘சட்டென மாறி ஜில்லிட வைத்த தமிழக வானிலை’... ‘இடி, மின்னலுடன் சென்னையில் மழை’... ‘சொன்னது போலவே கோடை வெயில் மாறியது எதனால் தெரியுமா?’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக, கொரோனாவுடன் கோடை வெயில் கொளுத்திய நிலையில், சட்டென வானிலை மாறியதால் மக்கள் குஷியில் உள்ளனர்.

தமிழகத்தில் மிதமானது முதல் கனமழை வரை, 15 மாவட்டங்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை முதல் பல இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது.

காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், சென்னையில் தற்போது இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர், சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரம்பலூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்