'பழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த புதிய பெருமை'... 'மகிழ்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழனி முருகன் கோயில்களில் வழங்கப்பட்டு வரப்படும், உலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த பெருமையால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி கோவிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக பேரிச்சம்பழம், கற்கண்டு உள்பட 5 பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் முருகன் பக்தர்கள், இந்த பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்வது வழக்கம்.

இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கேட்டு, இந்திய புவிசார் குறியீடு ஆணையத்திடம், பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகத்தினர், கடந்த 2016-ம் ஆண்டு, விண்ணப்பித்திருந்தனர். பொதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருள்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருள்களோ மகத்துவமும், தனித்துவமும் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம். 

அந்தவகையில், ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29-வதாக பழனி பஞ்சாமிர்தம் இணைந்துள்ளது. இதன்மூலம் முதன்முறையாக தமிழக கோயில்களில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பெருமையை பழனி முருகன் கோவிலுக்கு கிடைத்துள்ளது.

PANCHAMIRTHAM, PAZHANI, GITAG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்