அட்ராசக்க..6 லட்சத்துக்கும் 10ரூ காயின் கொடுத்து கார் வாங்கிய தமிழக இளைஞர்.. அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் செம்ம..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறும் 10 ரூபாய் சில்லரை காசுகளை கொண்டே கார் வாங்கிய சம்பவம் பலரையும் வியப்படையச் செய்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "என் அப்பாவை மீண்டும் ஒரு முறை"...தந்தையர் தினத்தில் ஆனந்த் மஹிந்திரா போட்ட உருக்கமான ட்வீட்.. கலங்கிப்போன நெட்டிசன்கள்..!

இந்தியாவில் 10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டாலும் அவற்றை வாங்க பலரும் மறுத்துவிடுகின்றனர். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியை நம்பி பலரும் அதை வாங்க மறுக்கவே பொதுமக்கள் பலரும் தங்களது வீட்டில் பத்து ரூபாய் காசுகளை பயன்படுத்தாமலேயே வைத்திருக்கும் நிலை இந்தியா முழுவதும் உள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெளிவான வரையறைகளை கொடுத்திருந்த போதிலும் கடைகள் மற்றும் வணிக தலங்களில் பத்து ரூபாய் நாணயங்களின் புழக்கம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.

விழிப்புணர்வு

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். தனது வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சிறுவர்கள் பத்து ரூபாய் நாணயங்களை செல்லாது என கருதி விளையாட்டுப் பொருளாக நினைத்து அதை வைத்து விளையாடி வருவதை கண்ட வெற்றிவேல் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பத்து ரூபாய் நாணயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பத்து ரூபாய் நாணயங்களை கொண்டே கார் வாங்க முடிவு எடுத்த வெற்றிவேல் கடைகள், வணிக வளாகங்கள், கோவில்கள் என பல இடங்களில் இருந்து பத்து ரூபாய் காயின்களைப் பெற்று சேகரித்து வந்திருக்கிறார்.

கார்

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கார் ஷோரூம்-க்கு சென்ற வெற்றிவேல் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் ஷோரூம் பணியாளர்கள் வெற்றிவேலின் கோரிக்கையை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் பத்து ரூபாய் காயங்களை பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து மூட்டை மூட்டையாக சுமார் 6 லட்சம் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களை கட்டிக்கொண்டு குடும்பத்தினரிடம் கார் வாங்க சென்றிருக்கிறார் வெற்றிவேல். சரக்கு வாகனத்தில் மூட்டைகளுடன் சென்று இறங்கிய வெற்றிவேல் அவற்றை ஷோரூம் பணியாளர்களும் ஒப்படைத்து அங்கேயே சில்லரை காசுகள் எண்ணப்பட்டிருக்கின்றன. பத்து ரூபாய் நாணயம் செல்லாது என கூறி வரும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இதனை செய்ததாக கூறுகிறார் வெற்றிவேல்.

தர்மபுரி மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை கொண்டே இளைஞர் ஒருவர் கார் வாங்கிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Also Read | பகல்-ல தூய்மைப்பணி.. நைட்ல படிப்பு.. 50 வயசுல 10-வது தேர்வுக்கு சென்ற பணியாளர்.. கல்விக்கு வயசு தடை இல்ல சார்.!

TAMIL NADU, MAN, CAR, COINS, BUY A CAR, இளைஞர், கார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்