'அதிகரிக்கும் சிசேரியன்'... 'தாய்ப்பால் கொடுப்பதில் தமிழகம் பின்னடைவு'... 'என்ன காரணம்'?... வெளியான ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் தமிழகம் பின்தங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
குழந்தைகளின் ஊட்டச்சத்தின் ஆதாரமாக விளங்குவது தாய்ப்பால் தான். இந்நிலையில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான கருத்தரங்கில் வெளியான தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக வெளியான அந்த அறிக்கை தான்.
அந்த அறிக்கையில் பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் 54.7 சதவீத குழந்தைகளுக்கே தாய்ப்பால் கொடுக்கப்படுவதும், 6 மாத காலத்திற்கு 48.3 சதவீத குழந்தைகளுக்கே தாய்ப்பால் புகட்டுவதும் தெரியவந்துள்ளது. அத்துடன் 6 முதல் 8 மாதக் குழந்தைகளுக்குத் திட மற்றும் திரவ நிலையிலான உணவுகளுடன் தாய்ப்பால் கொடுக்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த 15 சதவீதத்தை விடத் தமிழகத்தில் அதிக அளவு சிசேரியன் முறை குழந்தைப் பேறு நடைபெறுவது தெரியவந்துள்ளது. பிற மாநிலங்களை விடத் தமிழகத்தில் அதிகமாக 34 சதவீதம் குழந்தைப் பேறு சிசேரியன் முறையில் நடைபெறுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்