அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை - தொழிலாளர் நலன் போற்றும் தமிழக அரசு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தொழிலாளர் நல வாரியத்தில், இணையதளம் வாயிலாக, அமைப்பு சாரா தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துகொள்ளும் வசதியை தமிழக அரசின் தொழிலாளர் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 17 அமைப்புசாரா நல வாரியர்களில் 27.4 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்திருக்கின்றனர். இவற்றில் உறுப்பினராக, http://www.labour.tn.gov.in/ என்ற இணையதளத்தில், வீட்டிலிருந்தபடியே தொழிலாளர்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளும் வசதி, தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்வதன் மூலம், தமிழக அரசு சார்பில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வழங்கப்படும் ரூ.1000 நிவாரண நிதி மற்றும் அரிசி, பருப்பு போன்ற ரேஷன் பொருட்களை தொழிலாளர்கள் எளிமையாக பெற்றுக்கொள்ள முடியும். 

அவ்வாறு, இணையதளம் வாயிலாக பதிவு செய்த, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் பணியை, தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால், நேற்று தொழிலாளர் ஆணையரகத்தில் தொடங்கி வைத்தார். பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, அடையாள அட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய செயலர் யாஸ்மின் பேகம், தொழிலாளர் கூடுதல் ஆணையர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்