பொங்கலுக்கு தயாராகும் திரையரங்குகள்!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!.. ரசிகர்கள் கொண்டாட்டம்!.. 'இது' எல்லாம் கண்டிப்பா பின்பற்றணும்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன.
இதனால், திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளை இயக்க அனுமதியளிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை பலமுறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கொண்டு செல்லப்பட்டது.
தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதற்கிடையே பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சமீபத்தில் நடிகர் விஜய்யும், முதல்வர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இன்று அறிக்கை வெளியிட்ட சிலம்பரசன், 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'இது பேரழிவு.. நெலம ரொம்ப அபாயகரமா இருக்கு!'.. பிரபல லண்டன் மருத்துவமனையில் இருந்து ஊழியர்களுக்கு வந்த ‘பகீர்’ கிளப்பும் கடிதம்!
- 'இவன் கொரோனாவுக்கே அப்பன்!'.. 'மனித' குலத்தையே 'அழிக்க' வரும் அடுத்த 'பெருந்தொற்று'!.. எபோலாவை கண்டுபிடித்த 'மருத்துவ விஞ்ஞானி' கூறிய 'அதிர்ச்சி' தகவல்!
- 'உண்மையிலேயே ஹேப்பி நியூ இயர் தான்!'.. ‘இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள முதல் கொரோனா தடுப்பூசிகள்!’.. DCGI அதிரடி!
- 'தமிழகத்தின் இன்றைய (02-01-2021) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- தமிழ்நாடு முழுவதும் 1.60 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!.. தயார் நிலையில் சுகாதாரத்துறை!.. யாருக்கு?.. எங்கே?.. எப்போது?
- சிவப்பு எறும்பு, கொரோனாவுக்கு வில்லனா...? 'அவங்க இத ரொம்ப வருசமா சாப்பிடுறாங்க, அதனால தான்...' - '3 மாசத்துக்குள்ள முடிவெடுக்க உத்தரவு...!
- திரையரங்குகளில் பார்வையாளர்கள் அளவு கட்டுப்பாட்டு விவகாரம்!.. 'முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு?'
- 'மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளியுடன் உறவில் ஈடுபட்ட செவிலியர்!'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ!.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி!’
- ‘புது வருஷம் பொறந்த முதல் நாளேவா..!’.. சீனாவில் பரவிய ‘புதிய’ கொரோனா வைரஸ்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!