முழு ஊரடங்கில் சில ‘தளர்வுகளை’ அறிவித்த தமிழக அரசு.. எதற்கெல்லாம் புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1. காய்கறி, பூக்கடைகள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
2. அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி.
3. ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் (Continuous Process Industries manufacturing Essential items) இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு சேவைமையம் (Helpline) 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும்.
4. ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போல், அதே நிபந்தனைகளுடன் நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு எதிரான போரில்... முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!.. மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'இந்தியாவுக்கு கொரோனா நிதியை வாரி வழங்கிய ட்விட்டர் CEO'... 'ஆனால் அந்த நிதி யாருக்கு'... ட்விஸ்ட் வைத்த ஜேக் ஃபேட்ரிக்!
- 'மும்பையில் தான் அதிகமா இருக்குன்னு சொன்னோம்'... 'ஆனா குறைந்த கொரோனா பாதிப்பு'... எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?
- 'கொரோனா நிவாரண நிதி'... '2000 ரூபாய் எப்போது முதல் வழங்கப்படும்'?... அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
- 'வெளியில் தெரிய வருகிறதா சீனாவின் உண்மை முகம்'?... 'இதற்காக தான் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்?'... அதிரவைக்கும் பின்னணி!
- ‘இந்த அறிகுறி எல்லாம் தென்பட்டா உடனே டாக்டரை பாருங்க’!.. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும் புதிய பூஞ்சை.. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..!
- நீங்க 'அதுக்காக' தான் வெளிய வர்றீங்கன்னா... 'தயவுசெய்து இனிமேல் வராதீங்க...' 'அதுக்கு மாற்று ஏற்பாடு பண்ணியாச்சு...' - சட்டீஸ்கர் அரசின் 'அதிரடி' முடிவு...!
- ‘இன்று முதல் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு’!.. காய்கறி, மளிகை கடை எத்தனை மணி வரை திறந்திருக்கும்..? எதற்கெல்லாம் அனுமதி கிடையாது..?
- ‘8 மாத கர்ப்பம்’!.. உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ‘நிறைமாத’ இளம் மருத்துவர்.. பரிதாபமாக பலியான சோகம்.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!
- ‘இனியும் வெயிட் பண்ணக்கூடாது’!.. ரிஸ்க் எடுத்த இரண்டு தன்னார்வலர்கள்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!