கொரோனாவால் 'தனிமைப்படுத்தப்பட்டவர்கள்'... அவர்களின் குடும்பத்தினர் 'கண்டிப்பா' இதை பாலோ பண்ணனும்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதுகுறித்து கீழே பார்க்கலாம்:-

1. தனிமைப்படுத்தப்பட்டவருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும். அவர் எந்த காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. வீட்டிற்குள்ளேயே அங்குமிங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும்.

2. அவரை பராமரிக்கும் பணியை முகக்கவசம், கையுறையுடன் வீட்டில் உள்ள ஒரு நபர் மட்டுமே செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

3. அவரின் உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல் முகக்கவசம், கையுறை அணிந்து தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். முகக்கவசம், கையுறையை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு உபயோகித்து கழுவ வேண்டும்.

4. வீட்டில் உள்ள வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டோருடன் எவ்வித தொடர்பும் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

5. தனிமைப்படுத்தப்பட்டோருக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கொரோனா அறிகுறி இருந்தால் 104 என்ற எண்ணுக்கோ, கட்டணமில்லாத எண்ணான 1800 120 555550 என்ற எண்ணுக்கோ தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

6. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபரையும் தனிமைப்படுத்த வேண்டும். வீட்டை தினமும் 3 முறை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். வீடுகளில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்