100% வரிவிலக்கு... உங்களால் முடிந்த 'நிதியை' வழங்குங்கள்... தமிழக அரசு வேண்டுகோள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு 3280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றை தடுக்கவும், ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடவும் தமிழக அரசு முடிவு செய்து, அதன்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் நிதி அளிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி தங்களால் இயன்ற நிதியை அளிக்கலாம். இதற்கு 100% வரிவிலக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
1.முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க வேண்டும். மக்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80ஜி-யின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு.
2.நன்கொடைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மின்னணு மூலமாக வழங்கலாம். சென்னை தலைமைச் செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செலுத்தலாம். வங்கி கணக்கு எண்: 117201000000070, IFSC: IOBA0001172.
3.வெளிநாடு வாழ் மக்கள், IOBAINBB001, Indian Overseas Bank, Central Office, Chennai என்ற Swift Code-ஐ பின்பற்றி நிதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
5.அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,
முதலமைச்சர் பொது நிவாரண நிதி,
நிதித்துறை, தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா.
6.தற்போதைய நிலையில் முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடையை நேரடியாக வழங்குவதை ஊக்கவிக்க இயலாது. எனினும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி தருவோரின் விவரங்கள் பத்திரிகையில் வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
‘இரண்டரை மணிநேரத்தில்’.. கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் புதிய சோதனை.. அசத்திய பிரபல ஆய்வு நிறுவனம்..!
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘24 மணிநேரமும் வேலை’.. ‘ரெஸ்டே இல்லை’.. ‘யாரும் சோர்வாகிட கூடாது’.. அசத்திய டாக்டர்கள்..!
- 'மனைவியால், கணவருக்கு நிகழ்ந்த விபரீதம்'... ‘கொரோனா வைரஸ் பெயரை பயன்படுத்தி’... ‘பெண் கொடுத்த அதிர்ச்சி’!
- ‘வாரம் ஃபுல்லா ஒரே சோகம்’.. ‘இப்போ இவரால எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துருக்கு’.. இத்தாலிக்கு புத்துணர்ச்சி கொடுத்த ஒருவர்..!
- ‘ஆய்வகத்தில்’ உருவாக்கப்பட்டு ‘அக்டோபர்’ மாதம்... கொரோனாவை ‘வுஹானில்’ பரப்பியது ‘இவர்தான்’... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிர்ச்சி’ செய்தி...
- 'கண்ணு கலங்கிருச்சு'...'அப்பா நீ சாப்பிட்டியா பா'...'சிறையில் இருக்கும் தந்தை'...'வீடியோ காலில் உருகிய மகள்'!
- ‘10 நிமிஷத்துல 5 பேர் சீரியஸாகிட்டாங்க’.. ‘நான் பயந்துட்டேன்’.. ‘தினமும் அழுதுகிட்டேதான் வீட்டுக்கு போவேன்’.. உருகிய நர்ஸ்..!
- BREAKING: தமிழகத்தில் 4,100 பேர் மீது வழக்குப்பதிவு!... 400க்கும் மேற்பட்டோர் கைது!... காவல்துறை அதிரடி!
- 'தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கல, அதனால...' முரண்பாடுகள் இருந்தாலும் அணைத்து நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும்... ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்...!
- 'வீட்டுல இருந்திருந்தா இது நடந்திருக்குமா'... 'கதறி துடித்த பெற்றோர்'... சென்னை அருகே நடந்த கோரம்!
- ‘தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா... ‘எந்தெந்த’ மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ‘பாதிப்பு?’... சுகாதாரத்துறை தகவல்...