கொரோனா முன்னெச்சரிக்கை: 'தமிழக' மாணவர்களின் 'விடுமுறை' குறித்து... புதிய அறிவிப்பை 'வெளியிட்ட' அரசு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 81 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுதவிர கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸுக்கு பலியாகி இருக்கிறார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாநில அரசுகளும், மாணவர்களுக்கு கால வரையற்ற விடுமுறையை அறிவித்து இருக்கின்றன.

அந்த வகையில் தமிழக அரசு மார்ச் 16-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்.கே.ஜி, யூ.கே.ஜி) விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதவிர கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் மார்ச் 16 முதல் 31 வரை விடுமுறை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ராஜஸ்தான், கேரளா மாநிலங்களில் தலா 17 பேரும், மஹாராஷ்டிராவில் 16 பேரும், உத்தர பிரதேசத்தில் 11 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். டெல்லியில் 6 பேரும், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தலா 4 பேரும், லடாக்கில் 3 பேரும், காஷ்மீர், தெலங்கானா  மற்றும் பஞ்சாபில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்