'58 நிமிடங்களில் 46 விதமான உணவுகள்'... 'அசத்திய சென்னை சிறுமி'... புதிய சாதனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்58 நிமிடங்களில் 46 விதமான உணவுகளைச் சமைத்து, கேரளச் சிறுமியின் சாதனையைத் தமிழகச் சிறுமி முறியடித்து அசத்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் கலைமகள். அவரின் மகள் லட்சுமி சாய் ஸ்ரீ. கொரோனா கால விடுமுறையால் வீட்டிலிருந்துள்ளார். அப்போது கலைமகள் வீட்டில் விதவிதமான உணவுகளைச் சமைத்து வந்துள்ளார். அந்த நேரத்தில் சமையலில் தாய்க்கு உதவியாக லட்சுமி சாய் ஸ்ரீ இருந்துள்ளார். இதனால் அவருக்குச் சமையலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகளின் சமையல் ஆர்வம் குறித்து கலைமகள் தனது கணவரிடம் கூற, அவர், இதை ஏன் உலக சாதனையாகச் செய்ய முயலக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து இணையத்தில் தேடிப் பார்த்தபோது கேரளச் சிறுமி சான்வியின் சாதனை குறித்துத் தெரியவந்துள்ளது. அதை முறியடிக்கும் வகையில், லட்சுமி வெறும் 58 நிமிடங்களில் 46 விதமான உணவுகளைச் சமைத்து தற்போது சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ கூறும்போது, ''என்னுடைய தாயிடம் இருந்து சமையலைக் கற்றுக் கொண்டேன். உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்று தெரிவித்தார்.
முன்னதாக ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவுகளைச் சமைத்து, 10 வயதான கேரளச் சிறுமி சான்வி பிரஜித் உலக சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்