'ஊரடங்கில் தளர்வா இல்லை கட்டுப்பாடா'?... 'மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை'... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது. இதனால் பதவியேற்ற நேரத்திலிருந்து கடும் நெருக்கடிக்கு இடையே அரசு செயலாற்றியது.
அதேநேரத்தில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது.
தற்போது வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களைத் திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அச்சுறுத்தும் எண்ணிக்கை’!.. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிக்க ‘காரணம்’ இதுதான்.. மத்திய நிபுணர் குழு அறிக்கை..!
- 'பஸ் பாஸ்' மாதிரி... இது 'தடுப்பூசி பாஸ்'!.. வீட்டை விட்டு வெளிய வந்தா... 'இது' கட்டாயம்!.. அதிரடி திட்டத்தை கையிலெடுத்த நாடு!
- 'ஒரு வருஷம் நிம்மதியா இருந்தோமே'...'உகான் நகரை மீண்டும் துரத்த ஆரம்பித்த சோகம்'... அதிர்ச்சியில் மக்கள்!
- 'கேரளாவில் பயமுறுத்தும் எண்ணிக்கை'... 'கையை மீறி செல்கிறதா'?... புதிய கட்டுப்பாடுகள்!
- ‘இப்படியே போனா சரிப்பட்டு வராது’.. வேகமாக அதிகரிக்கும் கொரோனா பரவல்.. கேரள அரசு அதிரடி நடவடிக்கை..!
- 'ஒலிம்பிக்கில் பயன்படுத்திய வாள்'!.. முதல்வர் ஸ்டாலினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பவானி தேவி!.. வியப்பூட்டும் பின்னணி!
- 'என்ன ஆச்சு நம்ம சென்னைக்கு'... 'இந்த மண்டலங்களின் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா'... பின்னணி காரணம்!
- 'இப்படி இருந்தா எப்படி'?... 'இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை'... மத்திய அரசு கடும் எச்சரிக்கை!
- ‘என்னது மறுபடியும் மொதல்ல இருந்தா..!’.. ஒரு வருசம் கழிச்சு வூகானில் வேகமாக பரவும் கொரோனா.. சீனா எடுத்த அதிரடி முடிவு..!
- 'சின்னமையைப் போல அதிவேகமாக பரவும் 'டெல்டா வகை' கொரோனா'!.. லீக்கான அமெரிக்காவின் சீக்ரெட் ரிப்போர்ட்!.. நடுங்கவைக்கும் பின்னணி!