'நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்'... 'தேர்தலுக்கு ஆகப்போகும் செலவு'... தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டசபைத் தேர்தலை நடத்த ஆகும் செலவு குறித்த தகவலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளைத் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைப் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் கமி‌ஷன் எடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலை நடத்துவதற்கு மாநில அரசிடம்  ரூ.621 கோடி கேட்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா காலம் என்பதால் தேர்தலுக்கு ஆகும் செலவுத் தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது, என சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்