தமிழகத்தில் மேலும் 61 பேர் கொரோனாவுக்கு பலி!.. தொற்றின் வேகம் குறைகிறதா?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் மேலும் 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 2,76,255 ஆண்களும், 1,81,413 பெண்களும், 29 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,748 ( இன்று 61) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,98,366 ( இன்று 5,859) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 51,583 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,40,685 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 52,12,534 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 81,793 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 2,28,082 ஆண்களும், 1,49,034 பெண்களும், 29 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அக்டோபர்ல தான் இன்னும் மோசமானது இருக்கு'... 'தயாரா இருங்க'... 'எச்சரித்து தலைமைச் செயலாளர் கடிதம்!'...
- 'அதுல ஒரு குத்து.. இதுல ஒரு குத்து!'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப்? US தேர்தலில் எழுந்த புதிய குழப்பம்?
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்'... 'சென்னை நிலவரம் என்ன?'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'உலகமே காத்துக்கிடக்க'... 'கொரோனா தடுப்பூசி குறித்து முக்கிய தகவலுடன்'... 'WHO கொடுத்துள்ள ஷாக்!'...
- 'அபார்ட்மெண்ட்' பக்கத்துல 'ரத்த' வெள்ளத்தில் இறந்து கிடந்த 'செக்யூரிட்டி',,.. கார்ல வந்த அந்த 'பொண்ணு',,, 'சிசிடிவி'யில் தெரிய வந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!
- 'என்ன?... அரியர்ஸ் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சியா?.. அதெல்லாம் முடியாது'!.. 7 லட்சம் மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!.. என்ன நடந்தது?
- 'தீவிர நடவடிக்கையால் குறையும் பாதிப்பு'... 'அதுவும் இந்த 5 மண்டலங்களில்'... 'சென்னை மக்களுக்கு வெளியாகியுள்ள நிம்மதி தரும் செய்தி!'...
- 'பள்ளி' மாணவர்களின் 'ஆன்லைன்' வகுப்பில்.. 'அடுத்தடுத்து' நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!.. 'வியர்த்து விறுவிறுத்து' நின்ற ஆசிரியர்கள்!
- 'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்!'...
- கொரோனா தடுப்பு மருந்து 'ரிலீஸ்' தேதியை அறிவித்த டிரம்ப்!.. செம்ம ஸ்கெட்ச்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!.. பளிக்குமா 'இந்த' திட்டம்?