தமிழகத்தில் அடங்காத கொரோனா!.. ஒரே நாளில் 1,562 பேருக்கு தொற்று!.. குணமடைவோர் எண்ணிக்கை இவ்வளவா?.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 20,575 ஆண்களும், 12,637 பெண்களும், 17 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,527 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 15,413 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 6,07,952 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 14,982 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மொத்த பாதிப்பில், 17,441 ஆண்களும், 10,448 பெண்களும், 17 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்