தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 208 ஆக உயர்வு!.. ஓரே நாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 16,181 ஆண்களும், 9,677 பெண்களும், 14 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,316 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 11,345 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,598 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 5,28,534 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 14,101 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற செய்திகள்
'டிரம்ப்க்கு தண்ணி காட்டிய ஆன்டிஃபா பாய்ஸ்'... 'யார் இந்த ஆன்டிஃபா குரூப்'?... அரண்டு போன அமெரிக்கா!
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது!
- "கல் வீசி தாக்க ஆரம்பிச்சுட்டாங்க!".. 'தகன மேடையில்' இருந்து 'கொரோனா' நோயாளியின் 'பாதி எரிந்த' உடலை 'தூக்கிக்கொண்டு' ஓடிய 'உறவினர்!'..
- 'அவசர' அவசரமாக 'ஊருக்குள்' வந்த 'மாப்பிள்ளை'!.. 'தாலி' கட்டப்போற 'கொஞ்ச' நேரத்துக்கு முன் தெரியவந்த 'ஷாக்'!
- பைக்கில் சென்ற சார்பதிவாளர் கழுத்தை அறுத்த ‘மாஞ்ச நூல்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'ரெம்டெசிவிர்' மருந்தை 'இப்படி கொடுத்தால்...' 'செம்ம ஐடியா!...' 'நிச்சயம்' பலன் 'தரும்...' 'வீட்டில் இருந்தபடியே ட்ரீட்மென்ட்...'
- '2 லட்சம்' ரூபாய் கடனை தீர்க்க... 'ஜாக்குவார்' காரை திருடிய நபர்!
- 'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்!'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு!
- 'சாருக்கு' 5 வயசு தான் ஆகுது... ஊரடங்கை வீணாக்காமல்... அப்பாவோட சேர்ந்து 'பிசினஸ்' செய்யும் குட்டிப்பையன்!
- ஈரோட்டில் 2 ஆம் அலை கொரோனா தொற்றா!?.. சேலத்திலும் தலைதூக்கும் கொரோனா!.. மாவட்ட வாரியாக கொரோனா நிலை என்ன?
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது!.. பலி 197 ஆக உயர்வு!.. முழு விவரம் உள்ளே