தமிழகத்தை உலுக்கிய கொரோனா!.. ஒரே நாளில் 53 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 36,598 ஆண்களும், 22,759 பெண்களும், 20 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 25,863 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,493 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 8,92,612 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 31,401 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 30,709 ஆண்களும், 18,671 பெண்களும், 20 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தாக்கியதால், சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!
- "மாணவர்கள் விடுதிய காலி பண்ணுங்க!".. "மாநகராட்சியும் மாணவர்களுக்காக இந்த உதவிய பண்ணனும்!"... அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி!
- "சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று இருந்திருக்கா?".. ஷாக் தரும் ரிப்போர்ட்!
- "சென்னைக்காரன ஊருக்குள்ள விடாதீங்க!".. ‘இதென்னடா சென்னைக்காரனுக்கு வந்த சோதனை!’.. பரவிவரும் வீடியோ!
- 'தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?'... 'கொரோனா எப்போது குறையும்'... முதல்வர் பதில்!
- 'நாளை' தோன்றும் 'சூரிய கிரகணத்தோடு...' 'கொரோனா' வைரஸ் 'செயலிழக்கும்...' 'எதிர்பார்ப்பை' ஏற்படுத்தும் 'ஆய்வாளரின் கூற்று...'
- 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'இந்த மாத்திரையோட விலை ₹103...' '4 நாள்ல நல்ல ரிசல்ட் கிடைக்குது...' அவசரகால பயன்பாட்டின் கீழ் ஒப்புதல் பெற்ற நிறுவனம்...!
- ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போக வந்த ‘ஆம்புலன்ஸ்’.. கொரோனா ‘நோயாளி’ செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!
- "தமிழகம் முழுவதும்.. உணவகங்களில் இந்த கட்டுப்பாடு!".. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!