ஒரே நாளில் அசுர வேட்டை நிகழ்த்திய கொடூர கொரோனா!.. தமிழகத்தில் இன்று மட்டும் 38 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 27,520 ஆண்களும், 17,124 பெண்களும், 17 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 19,676 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,415 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 7,10,599 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 18,782 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 23,183 ஆண்களும், 14,052 பெண்களும், 17 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 105 பேருக்குமே 'நெகட்டிவ்'... அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு... 'நம்பிக்கை' தரும் மாவட்டம்!
- “வெண்டிலேட்டரே தேவையில்ல.. 2 மாசத்துக்குள்ள உலகெங்கும் கிடைக்கும்!”.. 'கொரோனாவை' எதிர்கொள்ள 'புதிய மருந்து'!.. 'ஆஸ்திரேலிய' அறிஞர்கள் 'சாதனை'!
- "புதிய வகை வைரஸ் பரவுகிறதா?..." சீனாவில் ‘போர்க்கால எமர்ஜென்சி’ அமல்... 'கோவிட்-19' அறிகுறிகள் 'தென்படாததால் அதிர்ச்சி...'
- 'கொரோனாவை விரட்டும் மூலிகை டீ...' 'இந்த மாவட்டத்துல நெறைய பேர் குணம் ஆயிட்டு வராங்க...' ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு மூலிகை டீ குடிக்கிறப்போ நல்ல பலன்...!
- பிரபல 'கிரிக்கெட்' வீரருக்கு 'கொரோனா...' 'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...' 'ட்விட்டர்' பதிவில் 'உருக்கம்...'
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...'
- 'இந்த அறிகுறி இருந்தால் கொரோனா இருக்கலாம்'... 'மக்களே ரொம்ப கவனம்'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
- இந்த 'மருந்தை' பெரிதாக நம்பினோம்... HCQ போன்று சர்ச்சையை கிளப்பும் மற்றொரு மருந்து... 'எய்ம்ஸ்' இயக்குனரின் 'புதிய விளக்கம்...'
- 'ஈசிஆர் ரோட்டில்' வந்த 'நடிகை ரம்யாகிருஷ்ணனின்' கார்... 'போலீசார்' மடக்கி 'சோதனையிட்டதில் அதிர்ச்சி ...' 'டிரைவர் கைது...' 'திரைத்துறை' வட்டாரத்தில் 'பரபரப்பு...'
- 'கொரோனா கொஞ்சம் ஓரமா போய் விளையாடு'... 'இந்தியாவுக்கே மாஸ் காட்டிய 97 வயது சென்னை தாத்தா'... சிலிர்க்க வைக்கும் சம்பவம்!