தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,342 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 25,167 ஆண்களும், 15,514 பெண்களும், 17 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 22,047 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 18,281 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,479 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 28,924 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 6,73,906 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 18,231 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 21,262 ஆண்களும், 12,763 பெண்களும், 17 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்!
- 'யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலியே'... 'இறங்கிய வேகத்தில் எகிறிய கொரோனா '.... 'என்ன செய்ய போறோம்'... அச்சத்தில் மக்கள்!
- இந்த மிரட்டலுக்கு நாங்க பயப்பட மாட்டோம்...' நாம இப்படி அனுபவிக்குறதுக்கு காரணமே...' 'சீனாவோட அலட்சியம் தான்...' டிராகனுடன் மோதும் கங்காரு...!
- 15 'மூலிகைகள்' கொண்டு தயாரிக்கிறோம்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'இனிப்பு'கள் அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?
- ‘2 ரூபாய்க்கு கொரோனா மருந்து’.. ‘தமிழக’ மருத்துவரின் கண்டுபிடிப்பை பரிசீலிக்க.. சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு..!
- தமிழகத்தில் ‘மறுபடியும்’ முழு ஊரடங்கா?.. முதல்வர் ‘அதிரடி’ பதில்..!
- ‘எந்த குடும்பத்துக்கும் இப்டியொரு சோதனை வரக்கூடாது’.. கதறியழுத உறவினர்கள்.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
- ‘ஆசையா வளர்த்த பூனை’.. ‘அதை எப்படியாவது காப்பாத்தணும்’.. உயிரை பணயம் வைத்த சென்னை பேராசிரியர்..!
- 'கொரோனா போற போக்க பாத்தா...' 'அடுத்து என்ன நடக்கப் போகுது?...' பிரபல 'மருத்துவ பத்திரிகை' அதிர்ச்சி 'தகவல்...'
- இந்த 4 'மாவட்டத்துக்கு' மட்டும்... 'ஊரடங்க' நீட்டிக்குற 'பிளான்' இருக்கா?... இன்னைக்குள்ள ஒரு 'முடிவ' சொல்லுங்க!