இன்று ஒரே நாளில் டாக்டர் உட்பட தமிழகத்தில் 23 பேர் கொரோனாவுக்கு பலி!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 23,981 ஆண்களும், 14,718 பெண்களும், 17 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 17,659 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,398 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 6,55,675 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 16,829 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 20,286 ஆண்களும், 12,119 பெண்களும், 17 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இத அப்பவே பண்ணியிருந்தா.. கொரோனா இந்த ஆட்டம் ஆடியிருக்காது!".. கொந்தளிக்கும் யுகே விஞ்ஞானி!
- 'தொடரும் ஊரடங்கு'... 'ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி'... 'இத நாங்க எதிர்பாக்கவே இல்ல'... வியந்து போன மக்கள்!
- சென்னையின் ஆன்மாவை புரட்டியெடுக்கும் கொரோனா!.. டாக்டர் உட்பட 10 பேர் பலி!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!
- ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்... 70% பேர் இருப்பது 'இங்கு' தான்... மண்டல வாரியான நிலவரம்!
- 'மீண்டும் ஜூன் 15-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு'... 'பரபரப்பான மக்கள்'... உண்மை நிலவரம் என்ன?
- 'கொரோனாவுக்கே நாங்க டஃப் கொடுப்போம்'... 'கொரோனா வார்டில் நடந்த கிரிக்கெட் மேட்ச்'... பட்டையை கிளப்பும் வீடியோ!
- 'பொது முடக்கம், சமூக இடைவெளி இதெல்லால் செல்லாது... 'அறிகுறி இருக்கோ, இல்லையோ...' இதை 'கட்டாயம்' கடைபிடிங்க... இதுதான் 'பெஸ்ட்...'
- வந்து விட்டது ‘ரிமோட்’ வெண்டிலேட்டர்... 'போலந்து' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...' 'மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு...' 'விலையும் குறைவு...'
- தொடர்ந்து உயரும் கொரோனா... ஆனாலும் ஒரு 'சூப்பர்' குட் நியூஸ்... இந்த விஷயத்துல 'நம்மள' அடிச்சுக்க முடியாது!
- சத்தமின்றி திருவண்ணாமலையில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே