தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்தது!.. இன்று மட்டும் 3,756 பேருக்கு தொற்று!.. முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 74,842 ஆண்களும், 47,486 பெண்களும், 22 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ( இன்று 64) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 74,167 ( இன்று 3,051) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 46,480 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,261 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 72,500 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 14,49,414 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 35,979 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 62,526 ஆண்களும், 38,904 பெண்களும், 22 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இது ஆவறது இல்ல!”... ‘விடிஞ்சி எழுந்ததும் இப்படி ஒரு முடிவை எடுத்து’.. ‘ஷாக் கொடுத்த டிரம்ப்’! கொரோனா இன்னும் என்னலாம் செய்ய போகுதோ!
- 'பசங்களா ரெடியா இருங்க'... 'அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி'... 'இந்த தேதி முதல் ஆரம்பம்'... அமைச்சர் செங்கோட்டையன்!
- “மதுபான விடுதி, இந்திய உணவகம் உட்பட 3 இடங்கள் க்ளோஸ்!”.. “யாருயா இந்த super spreader ? எனக்கே பாக்கணும் போல இருக்கு!”
- ஊழியரைக் கடத்தி 'அடைத்து' வைத்து... அந்தரங்க இடத்தில் 'சானிடைசர்' தெளித்து... 'சித்திரவதை' செய்த ஓனர்... ஷாக்கான போலீஸ்!
- மதுரையில் மேலும் 334 பேருக்கு கொரோனா!.. சென்னையில் குறைகிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. வெகுவாகக் குறைந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
- 100 ஆண்டுகளில் 'முதல்முறையாக' மூடப்பட்ட எல்லைகள்... 2-ம் அலையின் 'தொடக்கத்தால்' அதிரடி முடிவெடுத்த நாடு!
- கொரோனா வார்டில் 'கபடி'... வீடியோ வைரலானதால் பரபரப்பு!
- மாடு மிதிச்சி கால் 'ஊனமா' போச்சு... 70 கி.மீ தூரம், 8 மணி நேர சைக்கிள் பயணம்... '73 வயது' முதியவரின் நெகிழ்ச்சிக்கதை!
- சென்னை டூ புதுக்கோட்டை: சொந்த ஊரில் 'மனைவி'யை அடக்கம் செய்ய... சென்றவருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 'அதிர்ச்சி'யில் உறவினர்கள்!