தமிழகத்தில் மேலும் 57 பேர் கொரோனாவுக்கு பலி!.. ஆனால் நல்ல செய்தியும் வந்திருக்கு!.. முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 60,395 ஆண்களும், 37,975 பெண்களும், 22 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,321 ( இன்று 57) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 56,021 ( இன்று 3,095) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 41,047 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 62,598 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 12,35,692 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 33,488 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 50,641 ஆண்களும், 31,082 பெண்களும், 22 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “கொரோனா 2வது அலை”.. “2020க்குள் மேலும் 340 மில்லியன் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்!”
- தமிழகத்தில் அடுத்தடுத்து 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
- சேலத்தில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- இந்த '14 நாடுகள்' தான் பாதுகாப்பானது... அதனால அவங்களுக்கு 'மட்டும்' தான் அனுமதி... அதிர்ச்சி அளித்த ஐரோப்பிய ஒன்றியம்!
- தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,852 பேர் குணமடைந்துள்ளனர்!.. ஆனால் பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே
- "மூச்சு விட முடியல... என்ன காப்பாத்துங்க!".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்!.. வாசலிலேயே உயிர்பிரிந்த சோகம்!
- கடந்த '24 மணி' நேரத்துல மட்டும்... நாட்டுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'சுகாதாரத்துறை' அமைச்சகம்!
- 2 நாட்களில் 'இறந்து' போன புது மாப்பிள்ளை... உண்மையை 'மறைத்த' பெற்றோரால்... அடுத்தடுத்து '111 பேருக்கு' காத்திருந்த அதிர்ச்சி!
- 'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...!
- சென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா!.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?