தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!.. இன்று மட்டும் 5 ஆயிரம் பேர் வீடு திரும்பினர்!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 92,514 ஆண்களும், 59,283 பெண்களும், 23 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,167 ( இன்று 68) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,02,310 ( இன்று 5,000) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 47,340 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,291 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 17,36,747 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 41,382 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 77,112 ஆண்களும், 48,601 பெண்களும், 23 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சீனா அருகே பரபரப்பு!.. 'புபோனிக் பிளேக்' நோய்க்கு 15 வயது சிறுவன் பலி!.. பதறவைக்கும் பின்னணி!
- கொரோனா 'இறப்பு' விகிதத்தில்... 'சென்னை'யை பின்னுக்கு தள்ளிய 6 மாவட்டங்கள்!
- கொரோனாவை வென்ற 'செய்யூர்' தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் 'ஆர்.டி.அரசு'!.. மருத்துவமனை அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
- “பொண்ணு ரஷ்யால இருந்து வந்து 14 நாள் தனியா இருந்தா”.. மகளைக் காணச் சென்ற பெற்றோர்கள் கண்ட இதயம் நொறுங்கும் காட்சி!
- இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த... வீரர்கள் 'உடல்களை' சீன அரசு என்ன செய்தது?... வெளியான 'திடுக்' தகவல்!
- கொரோனா பரிசோதனை குச்சியை மூக்கில் விடும்போது விபரீதம்!.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்!
- மெடிக்கல் ஷாப்களில்... 'இந்த' மாத்திரை வாங்க மருந்து சீட்டு கட்டாயமா?... தமிழக அரசு விளக்கம்!
- இருமல், சளியில் இருந்து 'சூப்பர்' நிவாரணம்... 'கற்பூரவள்ளி டீ'க்கு ஏற்பட்ட திடீர் கிராக்கி... செய்முறை உள்ளே!
- ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு' ஓடி,ஓடி உதவிய அதிகாரி...அவருக்கா இப்டி ஒரு 'நெலமை' வரணும்?... அதிர்ந்து போன மக்கள்!
- கொரோனாவுக்கு 'தடுப்பூசி' கண்டுபுடிச்ச ரஷ்யா ... 'எப்போ' மக்களுக்கு கெடைக்கும்?