தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுக்கிறதா?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 1,68,889 ஆண்களும், 1,10,228 பெண்களும், 27 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,571 ( இன்று 110) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,21,087 ( இன்று 6,272) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 53,486 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,06,096 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 30,20,714 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 67,153 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 1,40,008 ஆண்களும், 90,290 பெண்களும், 27 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புதிய உச்சத்தை எட்டிய தங்க விலை'... 'ஒரே நாளில் எகிறிய பவுன் விலை'... வரலாறு காணாத உயர்வுக்கு என்ன காரணம் ?
- 'தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!'...
- லெபனான் வெடிவிபத்து... 'தமிழகத்திலும் இந்த வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறதா!?'.. அதிகாரிகள் கூறுவது என்ன?
- 'இந்த நாட்டில் மட்டும்'... '1 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு?'... 'அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்'...
- ‘தமிழகத்தில் பள்ளிகளை திறக்கப் போறாங்களா?’.. அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன?
- 'புதிதாக பரவும் டிக் போர்ன் வைரஸ்'... '7 பேர் பலியானதால் அச்சத்தில் சீன மக்கள்'... 'தொற்று பரவல் குறித்து வல்லுநர்கள் விளக்கம்'...
- 'தென் மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு?'... 'அரசு அறிக்கை கூறும் தற்போதைய நிலவரம்'...
- 'என்ஐடியில் எம்.எஸ்சி படிப்பு'... 'மாசம் பல லட்சம் சம்பளம்'... 'எல்லாத்தையும் உதறிவிட்டு சமையல்காரர் வேலை'... ஆச்சரியப்பட வைக்கும் பின்னணி காரணம்!
- கொரோனா போகணும்னா பெஸ்ட் ஐடியா 'இது' தான்...! - பிரபல மருத்துவமனை வெளியிட்ட ஆய்வு முடிவு...!
- 'இந்தியாவில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு'... 'பிரபல நிறுவனம் அறிவிப்பு'... 'பின்னடைவிலிருந்து வளர்ச்சிக்கு திரும்ப நடவடிக்கை!...