தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு உயிரிழப்பா!?.. நெஞ்சை நொறுக்கிய கொரோனா பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 2,00,253 ஆண்களும், 1,31,823 பெண்களும், 29 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,641 ( இன்று 127) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,72,251 ( இன்று 5,236) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 54,213 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,179 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,15,444 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 36,40,796 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 71,343 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 1,65,763 ஆண்களும், 1,08,247 பெண்களும், 29 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா தடுப்பூசி'... 'சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களுக்குப் பிரதமர் சொன்ன செய்தி'.... எதிர்பார்ப்பில் மக்கள்!
- 'சட்டத்திற்கு புறம்பானது' ரஷ்யாவின் முதன்மை மருத்துவர் ராஜினாமா... வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
- 3 மாசத்துக்கு முன்னாடி... சென்னையில கொரோனா நிறைய இருக்குனு... அலறியடிச்சு சொந்த ஊருக்கு ஓடினாங்க!.. இப்ப சென்னை எப்படி இருக்கு தெரியுமா?
- மறுபடியும் மொதல்ல இருந்தா?... குணமாகி சில மாதங்கள் கழித்து 'மீண்டும்' தொற்றிய கொரோனா... அதிர்ந்து போன சீனா!
- சேலத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா!.. திருச்சியில் மொத்த பாதிப்பு 5,654 ஆக உயர்வு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- “பதஞ்சலியின் கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா?”... சென்னை உயர்நீதிமன்றம் போட்ட ‘புதிய’ உத்தரவு!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... சென்னையில் மீண்டும் வேகமெடுக்கிறதா?.. முழு விவரம் உள்ளே!
- 'வாட்ஸ் அப்' திறக்கவே முடியல!.. அவ்ளோ ஆபாச வீடியோக்கள்!'.. 'இந்த முறை Block பண்ணல... ஆசையா ஒரு Reply வந்துச்சு'!.. சென்னைப் பெண் தரமான சம்பவம்!
- 'உச்சத்தில்' இருந்து கட்டுக்குள் வந்த கொரோனா... எந்தெந்த மாவட்டங்கள்னு பாருங்க!
- “லவ் பண்ணிட்டு, இப்படி பண்ணிட்டா!”.. காதல் முறிந்த விரக்தியில் பேஸ்புக்கில் இன்ஜீனியர் பார்த்த வேலை!.. 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பறந்த ஆபாச போன் அழைப்புகள்!