தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை!.. இன்று 119 பேர் பலி.. ஆனால்?.. வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 1,89,677 ஆண்களும், 1,24,814 பெண்களும், 29 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,278 ( இன்று 119) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,56,313 ( இன்று 5,633) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 52,929 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,12,059 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 34,32,025 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 71,575 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 1,57,117 ஆண்களும், 1,02,463 பெண்களும், 29 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னையில் நாளை'... 'எந்தெந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே'...
- "சென்னை பெசன்ட் நகர் சாலையோரத்தில் என் தாத்தாவிடம் 'அரசியல்' கற்றேன்!" - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் 'கமலா ஹாரிஸ்' பரபரப்பு தகவல்!
- “இதுவரைக்கும் நிறைய பேருக்கு வேலை பறி போயிருக்கலாம்.. ஆனா இனிமேதான் பேரழிவு காத்திருக்கு!”.. கனத்த இதயத்துடன் பிரிட்டன் அதிகாரி!
- 'இந்த எளிய சோதனை போதும்'... 'கொரோனாவால் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களை கண்டறிய'... 'ஆய்வாளர்கள் புது கண்டுபிடிப்பு!'...
- 'ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக்-5...' உண்மையாகவே கண்டு பிடிச்சிட்டாங்களா...? - விஞ்ஞானிகள் எழுப்பும் சந்தேகங்கள்...!
- 'திடீரென அதிகரித்த பாதிப்பு'... 'எங்கிருந்து பரவுகிறது என பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!'...
- கொரோனா ரொம்ப வேகமா 'பரவுறதுக்கு' இதுவும் ஒரு முக்கிய காரணம்... ஐ.நா எச்சரிக்கை!
- சேலத்தில் ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனா!.. மதுரையில் தொற்று குறைகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- அடக்கடவுளே! 4 மாசத்துக்கு அப்புறம் 'மீண்டும்' கொரோனா... அவசர,அவசரமாக 'ஊரடங்கை' அமல்படுத்திய நாடு!
- செப்டம்பர் மாசம் 'தடுப்பூசி' கெடைக்கும்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு... அவங்ககிட்ட இருந்து 'நம்ம' வாங்கலாமா?