தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 1,82,779 ஆண்களும், 1,20,007 பெண்களும், 29 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,041 ( இன்று 114) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,44,675 ( இன்று 6,037) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 53,099 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 976 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,10,121 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 32,92,958 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 67,153 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 1,51,384 ஆண்களும், 98,413 பெண்களும், 29 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எங்களால முடியல...1 லட்சத்து 39 ஆயிரம் பேரை 'வீட்டுக்கு' அனுப்ப போறோம்... 'ஷாக்' கொடுத்த நிறுவனங்கள்!
- “வயசு கம்மினாலும், உயிர் பிழைப்பேனானு பயந்தேன்.. சித்த மருத்துவத்தால், கொரோனாவில் இருந்து மீண்டேன்!”.. மருத்துவமனை ஆய்வக தலைமையாளர் மீனா!
- 'என்னாச்சு? எல்லாம் நல்லா தான போயிட்டிருந்தது!.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல!'.. பாரத் பயோடெக் 'அதிர்ச்சி' தகவல்!
- 'சென்னையில் பாதிப்பு குறைய என்ன காரணம்?'.... 'இம்மாத இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி!'...
- 'கணவருக்கு தெரியாமல் வீட்டு மாடியிலேயே'... 'மனைவி செய்துவந்த ரகசிய வேலை'... 'சென்னையில் கொள்ளை புகாரால் வெளிவந்த பகீர் சம்பவம்!'...
- 'பல மாசமா போராடி கொரோனா-க்கு தடுப்பூசி கண்டு பிடித்த நாடு...' 'ரெஜிஸ்டர் பண்ண போற நேரம் பார்த்து...' - குண்ட தூக்கி போட்ட தொற்றுநோய் நிபுணர்...!
- 'இவர்களாலேயே கொரோனா முடிவுக்கு வரும்'... 'இதுவும் நல்லதுதான்'... 'ஆய்வாளர்கள் கூறும் குட் நியூஸ்'...
- 'நாங்க கஷ்டப்பட்டாலும் பையன் டாக்டரா திரும்பி வருவான்னு நெனச்சனே'... 'உடைந்து போன மொத்த குடும்பம்'... ரஷ்யாவில் தமிழக மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை!
- சீனாவுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கையால்... பெருத்த 'நஷ்டம்' அமெரிக்காவுக்கு தான்... கலங்கிப்போன முன்னணி நிறுவனம்... காரணம் என்ன?
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'ஒரே நாளில் எகிறிய பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!