தமிழகத்தில் மேலும் 80 பேர் கொரோனாவுக்கு பலி!.. மீண்டும் சிக்கலில் சென்னை!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,80,808 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 3,50,462 ஆண்களும், 2,30,316 பெண்களும், 30 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,313 ( இன்று 80) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,25,154 ( இன்று 5,706) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 46,341 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,280 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,63,423 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 71,00,660 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 96,102 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 2,91,177 ஆண்களும், 1,91,282 பெண்களும், 30 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு!!!'...
- “அடிச்சுது யோகம்!” - கொரோனா டயத்துல இப்படி ஒரு முடிவு எடுத்த அரசு.. ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- 'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- “குளியல் அறைக்கு போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!” .. 'கொரோனா' சிகிச்சை மையத்தில் நடந்த 'பரபரப்பு' சம்பவம்!
- 'அது ஒன்னுதான் இருக்க நம்பிக்கை'... 'ஆனா தடுப்பூசி வர்றதுக்கு முன்னாடியே'... 'இங்க நிலைம'... 'ஷாக் கொடுத்துள்ள WHO!!!'...
- 'ஊரடங்கு நீட்டிக்கப்படுமா'?... 'மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ள முதல்வர்'... எதிர்பார்ப்பில் மக்கள்!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'தாய்க்கு கொரோனா பாசிடிவ்...' 'கெட்ட நேரத்துல வந்த நல்ல செய்தி...' 'இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்...' - நெகிழ்ந்து போன டாக்டர்ஸ்...!
- 'அந்த ஒரு ஆசை மட்டும்'... 'லைஃப்ல நிறைவேறாமயே போயிடுச்சே'... 'எஸ்.பி.பி மறைவால் கலங்கிய'... 'தினேஷ் கார்த்திக் உருக்கமான பதிவு!'...
- 'கொரோனா தடுப்பு மருந்தா!?.. அது எங்க ஊரு மருந்து கடையிலயே கிடைக்கும்!'.. அதிர்ந்து போன உலக நாடுகள்!.. முடிகிறதா கொரோனாவின் சகாப்தம்?