தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 13 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 14,065 ஆண்களும், 8,259 பெண்களும், 9 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,257 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 9,400 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 804 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 4,69,282 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இறந்த' பெண்ணின்... 'இறுதிச்சடங்கில்' பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா... 'வழக்கு' பாய்ந்தது!
- 'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே!
- சாதாரண இருமலும், தும்மலும் 'கொரோனா' பாதிப்பு அல்ல... அதன் 'காரணம்' இதுதான்: மருத்துவர்கள் விளக்கம்
- 'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்!
- கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
- கொரோனாவ Control பண்ண... 'சென்னை' மெட்ரோவின் அசத்தல் பிளான்!
- “இந்திய மக்கள் தொகையில்”.. “பாதிக்குப் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கக் கூடும்!”.. “ஜூலை மாதம் தொடக்கத்துல மட்டும்...” ஆய்வறிக்கை சொல்வது என்ன?
- ஈரானில் சாலைகளில் விழுந்து மரணிக்கும் மனிதர்கள்.. கொரோனாவாலா? என்கிற அச்சத்தில் நாட்டு மக்கள்!
- 'வேகமெடுக்கும் கொரோனா'... 'சென்னையில் தீவிரமாகப் போகும் கட்டுப்பாடுகள்'... அமைச்சர் விஜயபாஸ்கர்!
- “உனக்கும் கொரோனா இருந்தா.? நீ வீட்டுக்கு வராதம்மா!”.. பெற்ற 'தாயை' விரட்டிவிட்ட 'மகன்கள்'!.. 'சோறு, தண்ணி' இல்லாமல் 'சாலையில்' வசிக்கும் 'சோகம்'!