தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி!.. அதிகம் பாதிக்கப்படுவது யார்?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 12,219 ஆண்களும், 7,148 பெண்களும், 5 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 8,676 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 559 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 4,34,625 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மெட்ரோ ரயில்கள் இனி இப்படித்தான் இயங்கும்!.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'உலக சுகாதார மையமே சொல்லிடுச்சு!'.. 'பிரான்ஸை' தொடர்ந்து 'பெல்ஜியம், இத்தாலி' நாடுகள் 'அடுத்தடுத்து' எடுத்த அதிரடி 'முடிவு'!
- 'எங்களை மன்னிச்சிடுங்க'... 'சர்ச்சை குறித்து கென்ட் நிறுவனம் விளக்கம்'... விளம்பரத்தில் நடந்தது என்ன?... சர்ச்சைக்கு என்ன காரணம்?
- கொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து!.. 5 பேர் பலி!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!.. என்ன நடந்தது?
- ‘பிளாஸ்டிக் குடத்தில் விஷ நெடி’!.. போலீஸை பார்த்து தெரித்து ஓடிய கூட்டம்.. சென்னையை அதிரவைத்த ‘தாய், மகன்கள்’!
- “அடேய் பசங்களா.. என்னமா சந்தோஷம் தாண்டவம் ஆடுது!.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்!”.. உருகும் நெட்டிசன்கள்.. ட்ரெண்டிங்கில் #lockdown5!
- சென்னையில் 'கொரோனாவுக்கு' பலியான தலைமை 'செவிலியர்'!.. பணி 'நீட்டிக்கப்பட்ட' 2 மாதத்தில் நடந்த 'சோகம்'!
- ‘கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்’.. ஆம்புலன்ஸாக மாறிய போலீஸ் வாகனம்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- கொரோனா விஷயத்தில்... நாட்டிலேயே 'இந்த' 4 நகரங்கள் தான் பெஸ்ட்... மத்திய அரசு பாராட்டு!
- 'ஒரே நாள்ல இவ்வளவா?'.. தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!.. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பலி!.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!