சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா!?... தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது!.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா!?... தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது!.. முழு விவரம் உள்ளே

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 7,270 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,117 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 3,22,508 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்