தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது!.. பலி 197 ஆக உயர்வு!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 15,394 ஆண்களும், 9,179 பெண்களும், 13 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 10,680 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 809 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 4,90,804 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இன்று மட்டும் 10,558 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏற்கனவே ரொம்ப 'கஷ்டத்துல' இருக்கீங்க... அந்த விஷயத்துல 'அமைதியா' இருக்கணும் இல்லன்னா... 'இந்தியா'வுக்கு பகிரங்க மிரட்டல்?
- 'எனக்கு கொரோனா வந்தது கூட ஷாக் இல்ல'...'ஆனா, ஹாஸ்பிட்டல் பில்லை பார்த்து ஆடிப்போன நோயாளி'... அட்டாக் வர வைக்கும் பில் தொகை!
- “அவருக்கு கொரோனா இல்ல.. வந்து அழைச்சுட்டு போங்க!”.. 'நோயாளியின்' சடலத்தை 'புதைத்த' பின் 'மருத்துவமனையில்' இருந்து வந்த 'போன் கால்'!.. 'அதிர்ந்த' குடும்பம்!
- ஊரடங்கை அமல்படுத்தியதில் நாட்டிலேயே 'சிறந்த' மற்றும்... 'மோசமான' மாநிலங்கள் இதுதான்!
- 'இந்த' வருஷம் முழுக்க... கொரோனாவுக்கு நடுவிலும் 'சென்னைக்கு' அடித்த அதிர்ஷ்டம்!
- 'அட்ரஸ்' மாற்றி சடலத்தை அனுப்பிய 'மருத்துவமனை...' 'சோகத்தில்' உருக்குலைந்துபோன 'குடும்பம்...' அதன்பின்னர் நடந்த 'வேறலெவல் ட்விஸ்ட்...'
- 'கொரானா' வைரஸ், தானே 'பலவீனமடைந்து வருகிறதா...?' இத்தாலி, ஸ்பெயினில் குறைந்ததற்கு காரணம் என்ன?... 'ஆதாரங்களை' அடுக்கும் 'ஆராய்ச்சியாளர்கள்...'
- "இனி தனியார் பரிசோதனை கூடங்களில்... கொரோனா பரிசோதனைக்கு ஆகுற செலவு இவ்ளோதான்"!.. 'அமைச்சர்' விஜயபாஸ்கர் அதிரடி!
- 'கொரோனா' மருந்துக்கு 'ரஷ்யா வைத்த பெயர்...' '11ம்தேதி' முதல் நோயாளிகளுக்கு 'வழங்க திட்டம் ...' விரைவில் 'முழு விவரங்களை' வெளியிடுவதாக 'விளக்கம்...'
- கொரோனா பாதிப்பில் ... ஸ்பெயின், இத்தாலிக்கு அடுத்த 'இடத்தை' பிடித்த இந்தியா... ஆனாலும் ஒரு 'நல்ல' செய்தி!