தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,009 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் மேலும் 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,14,170 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 4,91,980 ஆண்களும், 3,22,156 பெண்களும், 34 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
இதில், கடந்த 21ம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,069 ( இன்று 10) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,93,154 ( இன்று 1,091) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே 8,947 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 290 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,24,386 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 1,39,24,527 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 64,283 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 4,09,469 ஆண்களும், 2,68,593 பெண்களும், 34 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுடன்’... ‘தொடர்பில் இருந்த’... ‘மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று’... ‘எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு???’...
- 'அந்த நாட்டுல தான் எங்கள விட...' புதிய வகை கொரோனா பயங்கர ஸ்பீடா பரவுது...' - பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த நாடு...!
- 'தமிழகத்தின் இன்றைய (26-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- "இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா???” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி?!! - ‘அதிர்ச்சியை’ கிளப்பும் கேரள சுகாதாரத்துறை!!!
- 'ஃபைஸரைத் தொடர்ந்து இதிலும் கடும் பக்கவிளைவா???'... 'தீவிர சிகிச்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்?!!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!!!'...
- 'உருமாறும் கொரோனா'... 'இவர்கள்தான் ஈஸியான டார்கெட்'... 'மருத்துவர்களுக்கு இருக்கும் சிக்கல்'... இளம் தமிழ் மருத்துவர் எச்சரிக்கை!
- மருத்துவமனைக்குள் ‘இந்த’ இடங்களில் அதிகமாக இருக்கும் கொரோனா வைரஸ்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
- 'ரஜினிக்கு என்ன ஆச்சு?'.. கொரோனா ‘நெகடிவ்’ என ரிசல்ட் வந்ததும் நிம்மதி அடைந்த ரசிகர்களுக்கு மீண்டும் உருவான பதற்றம்! ‘அப்போலோ’ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!
- அச்சுறுத்தி வரும் ‘புதிய’ கொரோனா வைரஸ்.. இந்த 7 அறிகுறி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.. வெளியான முக்கிய தகவல்..!
- '12 பேர் பலி!'... 9 ஆயிரத்து 217 பேர் சிகிச்சையில்... ‘தமிழகத்தில்’ இன்றைய (2020, டிச.24) கொரோனா பாதிப்பு! - முழு விபரம்!