தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா!.. ஒரே நாளில் 1,000 பேருக்கு மேல் தொற்று உறுதி!.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

தமிழகத்தில் இன்று (19-03-2021) ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்படைந்த 1,243 பேரில் 1,240 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,65,693 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,291 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,41,127 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 634 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,45,812 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் 5 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,590 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்படைந்த 8,65,693 பேரில் ஆண்கள் 5,22,902 பேர் எனவும், பெண்கள் 3,42,756 பேர் மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 35 ஆக உள்ளனர்.

தற்போது சென்னை உட்பட தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் முன்னெச்செரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் முறையாக பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை ஆகும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்