'தம்பி, பைக்கை நிறுத்துங்க'... 'காவலர் கேட்ட உதவி'... 'யோவ், அவரு தான் யா மனுஷன்'... ஒரே வீடியோவில் பலரது இதயத்தை தொட்ட காவலர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று காவலர்கள் எவ்வளவு மனித நேயத்துடன் செயல்படுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது.
நெடுந்தூரம் பயணம் செய்யும் பைக்கர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக ரைடிங் ஜாக்கெட், கையுறைகள், தரமான ஹெட்மேட் என பலவற்றை வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் பைக்கில் செல்லும்போது Vlog செய்வதையும் பல இளைஞர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதனால் தங்கள் ஹெல்மெட்யின் மேல்புறம் கேமரா ஒன்றையும் வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் சில இடங்களில் காவலர்கள் பைக்கர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் பொது, சில நேரங்களில் கடினமாக நடந்து கொள்வது உண்டு. அப்போது அந்த கேமராவில் பதிவாகும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில் கர்நாடக வாலிபர் ஒருவர், தமிழகத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநில பைக்கர் AnnyArun என்பவர், தன்னுடைய கேடிஎம் பைக்கில் பாண்டிச்சேரியிலிருந்து சாலைப் பயணமாகத் தென்காசிக்குப் பயணமாகிக் கொண்டிருந்தார். அப்போது அவரை காவலர் ஒருவர் வழிமறித்தார். ஏதோ வாகனப் பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ் போன்றவற்றைக் கேட்கத்தான் அந்த காவலர் அவரை நிறுத்தியதாக எண்ணினார்.
அந்த காவலர், நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவரா எனக் கேட்கிறார். ஆமாம் என அந்த வாலிபர் கூறும்போது. சாலையில் செல்லும் அரசுப் பேருந்தைச் சுட்டிக்காட்டி, இது போன்ற அரசு பேருந்து ஒன்று முன்னாடி சென்றுகொண்டிருக்கிறது, அதில் உள்ள அம்மா ஒருவர் இந்த மருந்து பாட்டிலைத் தவறவிட்டுவிட்டார். நீங்கள் வேகமாக பஸ்ஸை முந்திச்சென்று பேருந்தில் செல்லும் அந்த அம்மாவிடம் இந்த மருத்து பாட்டிலைக் கொடுத்து விடுங்கள் என்கிறார்.
உடனே அந்த பாட்டிலைப் பெற்றுக்கொண்ட கர்நாடக வாலிபர், தனது பைக்கை வேகமாகச் செலுத்திச் செல்லும் போது காவலர் சொன்னது போலவே பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் சைகை காட்டி முன்னாள் சென்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துகிறார். பின்னர் நடந்தவற்றை விளக்கிக்கூறி தன்னிடம் இருந்த மருந்து பாட்டிலை அந்த அம்மாவிடம் கொடுக்கிறார்.
இந்த வீடியோவை அந்த கர்நாடக வாலிபர் தன்னுடைய யுடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காவலரின் மனிதநேயத்தை அவர் வியந்து பாராட்டியிருக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அந்த காவலரைப் பாராட்டி வருகிறார்கள். காவல்துறையினர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், இதுபோன்ற காவலர்கள் காவல்துறை என்பது எப்போதுமே மக்களுக்கான பணி என்பதை நிரூபித்து வருகிறார்கள் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தனிமையில் இருந்த போது வீடியோ'... 'சைக்கோ கணவனின் வாட்ஸ்அப்பில் இருந்த வீடியோ ஸ்டேட்டஸ்'... சென்னை ஐடி பொறியாளரின் அதிரவைக்கும் மறுபக்கம்!
- VIDEO: 'வண்டி ஓட்டிகிட்டு இருந்தவரு...' 'என்ன நெனச்சாரோ தெரியல...' 'திடீர்னு வண்டிக்கு மேல ஏறி...' 'வண்டி அது பாட்டுக்கு போய்ட்ருக்கு...' - வைரல் வீடியோ...!
- முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் கார் நின்ற வழக்கில் பரபரப்பு திருப்பம்.. மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது..!
- ‘ஏதோ உருவம் தெரியுர மாதிரி இருக்கே’!.. நள்ளிரவு ‘கூவம்’ ஆற்றில் வந்த சத்தம்.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன குடும்பம்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி..!
- 'கோழி கொண்டை ஹேர் ஸ்டைலை ஒட்ட நறுக்கிய இன்ஸ்பெக்டர்'... 'வைரலான வீடியோ'... இன்ஸ்பெக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 'ஃபேஸ்புக்கில் போடப்பட்ட ஒரு ஸ்டேட்டஸ்...' உண்மை என நம்பி எல்லாரும் 'அத' பண்ணிருக்காங்க...! 'ஒருத்தருக்கு மட்டும் வந்த டவுட்...' - நூதன மோசடி...!
- 'அப்படி என்ன அந்த இளைஞர் கேள்வி கேட்டார்?'...'தல அஜித்' ஸ்டைலில் பாடம் புகட்டிய கமிஷனர்'... வைரலாகும் கமிஷனர் சொன்ன பதில்!
- ‘வாழ்க்கையை மாற்றிய 3 மாச மிஷன்’!.. Web series-ஆக உருவாகும் பெண் போலீஸின் சாதனை.. அப்படி என்ன செய்தார்..?
- 'சுத்தி வளைச்சிட்டாங்க...' 'இனி கையில வச்சுருந்தா சேஃப் இல்ல...' - அதோட விலைய கேட்டா தலையே சுத்திடுச்சு...!
- ஐயையோ...! 'எனக்கு லாட்டரி அடிச்சிடுச்சே...' 'ஒருவேளை அப்படி நடந்துட்டா...' 'திடீர்னு தோன்றிய பயம்...' - அவசர அவசரமாக எடுத்த முடிவு...!