'சம்பளமே வேண்டாம்'...'அவங்களை என்கிட்ட விடுங்க'...'தமிழக கான்ஸ்டபிள்' எழுதிய பரபரப்பு கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். தலைநகரில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூரம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே இந்த வழக்கில் 5 பேர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறையில் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு  அளித்தது. ஆனால் இவர்களின் மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில் இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபாஷ் ஸ்ரீனிவாசன் டெல்லி திகார் சிறையின் தலைமை காவலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்ற ஆள் இல்லை என்று கேள்விப் பட்டேன். அந்த வேலையை நான் தாராளமாக செய்கிறேன். அதில் நான் மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறேன். இந்த வேலைக்கு எனக்கு ஊதியம் தேவையில்லை. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் செய்பவர்கள் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரான எஸ்.சுபாஷ் ஸ்ரீனிவாசன், கடந்த 1997ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். தற்போது இவர் தமிழக காவல்துறையில் தலைமை கான்ஸ்டபிளாக பதவியில் உள்ள இவர், பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலை ஓரத்திலுள்ள 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களிலிருந்து 100 கிலோ மதிக்கத்தக்க ஆணிகளை  அகற்றி பலரது பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தான் தூக்கிலிடுவதாக அவர் எழுதியுள்ள கடிதத்திற்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

TAMILNADUPOLICE, POLICE, RAPE, SEXUALABUSE, NIRBHAYA CASE, HANGMAN, NIRBAHYA RAPISTS, EXECUTIONER JOB, TIHAR, TAMIL NADU COP, HEAD CONSTABLE, SUBASH SRINIVASAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்