'பார்வை இழந்தவர்கள் புதுவாழ்வு பெறட்டும்'!.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' முடிவு!.. வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், தான் கண் தானம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இறப்புக்குப் பிறகு கண்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் கண் தானத்தின் மூலம், பார்வை இழந்தவர்கள் புதுவாழ்வு பெறுகிறார்கள். அந்த வகையில், கண் தானத்தை ஊக்குவிப்பதற்காக தனது இரு கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
நாட்டில் சுமார் 68 லட்சம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்துள்ளனர். தற்போது உள்ள மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக ஒரு நபரிடம் தானமாக பெறப்படும் இரு கண்கள், எளிய கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரு நபர்கள் கண்பார்வை பெற்று பயனடைவதுடன், கூடுதலாக கண்களின் பிற பாகங்களும் தேவைக்கேற்ப கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டினை ஏற்படுத்தும் வகையிலும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில்...' 'ரூ.3000 கோடி மதிப்பில் குடிநீர் வசதி திட்டம்...' - தமிழக அரசு அறிவிப்பு...!
- 'ஊரடங்கு தளர்வால்'... 'மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கும் அபாயம்'... 'மருத்துவ வல்லுநர்களுடன்'... 'முதலமைச்சர் 'முக்கிய' ஆலோசனை'...!
- 'அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் வரை.. மாணவர்களுக்காக'.. தமிழக முதல்வரின் 'புதிய' அறிவிப்பு!
- பாகுபலியோடு ஒப்பிட்டு முதல்வரை புகழ்ந்து தள்ளிய மாணவர்கள்!.. தெறிக்கும் வாசகங்களுடன்... 'வைரல்' போஸ்டர்கள்!.. செம்ம ஹைலைட் 'இது' தான்!
- 'கொரோனா நேரத்திலும் சாதித்த தமிழ்நாடு'... 'தேசிய அளவில் மூன்றாவது இடம்'... முதல்வர் பெருமிதம்!
- 'முதல்வரின் காருக்குள் பறந்து வந்த கடிதம்'... 'அதிர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள்'... 'கடிதத்தில் அப்படி என்ன இருந்தது'?... வியாபாரிக்கு முதல்வரின் சர்ப்ரைஸ்!
- 'வரும் மாதத்தில்' இருந்து 'ரேஷன் பொருட்களை' பெறுவதற்கு 'இப்படி ஒரு ஐடியா!'.. தமிழக அரசு அதிரடி!
- 'பொது முடக்கம் நீட்டிப்பு'?... 'முதலமைச்சர் நடத்திய முக்கிய ஆலோசனை'... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!
- '3 லட்சத்தை கடந்த பாதிப்பு'... 'முதல்வர் இந்த முடிவை எடுப்பாரா'?... மருத்துவ குழுவுடன் முக்கிய ஆலோசனை!
- வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள்!.. சர்ப்ரைஸ் விசிட்-ஆக வந்து... முதல்வர் பழனிசாமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!