"என் ஆயுளின் கடைசி விநாடி வரை"... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கமான கடிதம்!.. தொண்டர்கள் நெகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அதிமுக முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியினருக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கிறது. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதிமுக கட்சி தொண்டர்களுக்கு அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் இந்த உச்ச பதவிக்கு தான் வந்திருப்பதைப் பற்றி நெகிழ்ந்து கூறியுள்ளார்.
மேலும், கட்சிக்கு உண்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உழைக்கும் யாவரும் இத்தகைய உச்ச பதவிக்கு வர முடியும் என்பதற்கு சான்றாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்குவதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சிய அரசை படைக்க, வரும் சட்டமன்ற தேர்தலில், மீண்டும் அதிமுக வெற்றி பெற வேண்டும் எனவும், அதன் பொருட்டு 'குருதியிலே உறுதி கலந்து உழைப்போம், புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்' என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது ஏன்?.. எப்படி?
- 'நம்மில் ஒருவர்'... 'தேர்தலுக்கான பணியை தொடங்கிய அதிமுக'... முதல்வர் எடப்பாடி போட்ட ட்வீட்!
- '6 மாசமா காதலிச்சோம்'... 'ஆனா வீட்டை விட்டு வர இதுதான் காரணம்'... சௌந்தர்யா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
- #BREAKING: ‘கட்சிக்கு இவர்’!.. ‘ஆட்சிக்கு இவர்’!.. வெளியானது ‘அதிமுக’வின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!
- “யார் முதல்வர் வேட்பாளர்?”.. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை.. அதிமுகவின் அடுத்த கட்ட ‘பரபரப்பு’ முடிவு ‘சற்று நேரத்தில்’ அறிவிப்பு!
- "ஓபிஎஸ் எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார்!".. - அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் 'பரபரப்பு' கருத்து!.. நாளை நடக்கப்போவது என்ன?
- முதலமைச்சர் வேட்பாளர் யார்?.. நாளை அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரும் நிலையில்... இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு தனித்தனியே தீவிர ஆலோசனை!
- “19 வயது கல்லூரி மாணவியுடன் எம்.எல்.ஏ திருமணம்!”... பெண்ணின் தந்தை மேற்கொண்ட அடுத்தகட்ட நகர்வு!
- “எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” - ஓபிஎஸ்! .. 'மூத்த அமைச்சர்களுடன் முதல்வரின் ஆலோசனை!'.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? சூடுபிடிக்கும் அரசியல் களம்!
- 'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!' - துணை முதல்வர் ஓபிஎஸ் 'பரபரப்பு' கருத்து!.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?.. ஓபிஎஸ் சொல்ல வருவது என்ன?