‘அதிரடி கிளப்பிய எடப்பாடியார்..!’ அடுத்த நடவடிக்கை என்ன..? ‘அதிர்ந்து போயிருக்கும் அரசியல் வட்டாரம்..!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எம்.மணிகண்டனை நேற்று திடீரென நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகித்த மணிகண்டன் விடுவிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில்நுட்ப துறையையும் சேர்த்து கவனிப்பார் எனவும் ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள மணிகண்டன் தன்னை எதற்காக பணிநீக்கம் செய்தார்கள் எனத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் சமீபத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேட்டி அளித்ததாலேயே மணிகண்டன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்ற 2 ஆண்டுகளில் அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் இது ஃப்ரீ’.. தமிழக அரசு அசத்தல்..!
- ‘மின்னல் தாக்கியதில்..’ ஒரே நாளில் 32 பேர் பலியான சோகம்..
- ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடப்படும்...! முதலமைச்சர் அறிவிப்பு..!
- டெல்லி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்; பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்..
- 'இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்'... '22 சட்டப்பேரவை தொகுதி நிலவரம் என்ன?'
- 'காலை 8.30 மணிக்கெல்லாம் முதல்கட்ட ரிசல்ட்’.. தேர்தல் முடிவுகளை இந்த ஆப்பில் பார்க்கலாம்!
- 'குக்கரா, அத நாங்கதான் வாங்கியிருக்கோம்'.. இது என்ன புது சர்ச்சை!
- ‘மனித சிறுநீரை சேமித்து வைக்க வேண்டும்’.. நிதின் கட்காரி பேச்சால் சர்ச்சையா?
- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள்.. தலைவர்கள் புகழாராம்!