வேஷ்டி சட்டையில் இருந்து, புது உடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லண்டன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த புதன்கிழமையன்று லண்டன் சென்றடைந்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் லண்டன் சென்றுள்ளனர். லண்டன் விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமிக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வியாழக்கிழமையன்று கையெழுத்தானது. மலேரியா, டெங்கு போன்ற நோய்களை ஏற்படுத்தும், கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், மற்றும் தமிழகத்தில் அந்த நோய்களை கையாளும் வழிமுறைகளை பரஸ்பரம் அறிந்து கொள்ள ஏதுவாக, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும், 108 அவசர ஊர்தி சேவையை மேம்படுத்தும் விதமாக, இங்கிலாந்தின் 999 அவசர ஊர்தி சேவையை, முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். அவருக்கு அதன் சிறப்பம்சங்கள் குறித்து, லண்டன் மருத்துவத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பின்னர் லண்டன் நகரில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை, தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தமும் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
மற்ற செய்திகள்
‘பிள்ளைகள் இன்றி வாடிய முதிய தம்பதி’... ‘மனைவி எடுத்த விபரீத முடிவால்’... ‘கணவருக்கு நேர்ந்த சோகம்’!
தொடர்புடைய செய்திகள்
- பால் விலை உயர்வு ஏன்? தமிழக முதலமைச்சர் விளக்கம்...!
- ‘சுற்றுலா சென்ற இடத்தில்’ காணாமல் போன.. ‘மனநலம் பாதித்த சிறுமிக்கு’ நடந்த பயங்கரம்..
- 'சுதந்திர தின விழாவில்'...முதலமைச்சரின் 'அதிரடி' அறிவிப்பு...'புதுசா பிறக்கப்போகும் 2 மாவட்டங்கள்'!
- ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடப்படும்...! முதலமைச்சர் அறிவிப்பு..!
- தமிழகத்தில் 3 புதிய மாவட்டங்கள்..! சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு..!
- 'இன்னொருத்தரும் சேந்துட்டார்'.. முதல்வர் முன்னிலையில் அதிமுக-வில் அதிரடியாக இணைந்த பிரபல நடிகர்!
- 'பேருந்தில் இளம்பெண்களுக்கு நடந்த கொடூரம்'... 'முத்தமிடக்கோரி அடித்து உதைத்த கும்பல்'!
- ‘தினமும் 40 முறை போன் செய்து தொந்தரவு’.. இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு.. வசமாக சிக்கிய இளைஞர்!
- 'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'!
- 'நான் வாய தொறந்தா,உங்க காது சவ்வு கிழிஞ்சிடும்'...முதல்வருக்கு ஏன் இவ்வளவு கோபம்?