'காவல்துறையிடம் இருந்து வந்த போன் கால்'... 'அண்ணாமலைக்கு வழங்கப்பட 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு'... பரபரப்பான பின்னணி காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக பாரதிய ஜனதா கட்சி துணைத்தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கர்நாடகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த ஆண்டு பாஜகவில் அவர் இணைந்தார்.

இந்நிலையில், மதவாத போராளிகளாலும், மாவோயிஸ்டுகளாலும் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவலர்கள் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பரிந்துரையின் பேரினாலும் இந்த பாதுகாப்பு அவருக்கு அளித்துள்ளது மாநில பாதுகாப்பு மறுபரிசீலனை குழு.

இதுகுறித்து பேசிய அண்ணாமலை, "பாதுகாப்பு தொடர்பாக உள்ளூர் போலீசார் என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். எனது உயிருக்கு என்ன ஆபத்து உள்ளது என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நான் எந்தவித மதத்திற்கும் எதிராகவும் பேசியதில்லை. எல்லோருடனும் இணைந்தே பயணிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் ஐந்து போலீசாரும், வெளியில் செல்லும் போது இருவரும் அண்ணாமலைக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்