'தமிழகத்தில் மே 10 முதல் பொது முடக்கம்'... 'எதற்கெல்லாம் தடை, அனுமதி?'... 'பேருந்து, கார் ஓடுமா'?... வெளியான முழு விவரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் சங்கிலியைத் தடுக்க தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாள்களில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள், தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின்போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது: மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.
வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களைத் தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும் (https://eregister.tnega.org). இரயில் மற்றும் விமான நிலையங்களுக்குப் பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.
3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்கள் (Shopping Complex & Malls) இயங்க 26.04.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12.00 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
தங்கும் விடுதிகள் (ழடிவநடள யனே டுடினபநள) செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காகத் தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும். உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.
கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்படத் தடை தொடர்கிறது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபார கடைகளுக்குத் தடையும் தொடர்கிறது. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.
இதற்கிடையே மாவட்டங்களுக்கு இடையே தனியார் பேருந்து போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்ஸி ஆட்டோக்களுக்கும் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை இயங்க தமிழக அரசு தடை விதித்துள்ளது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இனி காலை முதல் மதியம் வரை மட்டுமே அனுமதி’!.. தமிழகத்தில் ‘புதிய’ கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பு.. முழு விவரம்..!
- 'சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் மட்டும் பொது முடக்கமா'?... 'தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை'... என்னென்ன அறிவிப்புகள் வரும்?
- 'இந்தியாவில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு'... 'அந்த லிஸ்டில் இருக்கும் தமிழக மாவட்டங்கள்'... சுகாதாரத்துறை பரிந்துரை!
- என் காதலிய ரொம்ப மிஸ் பண்றேன்...! 'எப்படி நாங்க ரெண்டு பேரும் மீட் பண்றது...? 'போலீசாரிடம் கேட்ட இளைஞர்...' - போலீசார் கொடுத்த 'வேற லெவல்' பதில்...!
- 'இரவு 10 மணிக்கு தொடங்கும் ஊரடங்கு'... 'தேவையில்லாமல் பைக், காரில் சுற்றினால் என்ன நடக்கும்'... சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!
- அதிகரித்து வரும் 'கொரோனா' தொற்று... 'இரவு' நேர ஊரடங்குடன், கடுமையான பல 'புதிய' கட்டுப்பாடுகள்... அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது தமிழக அரசு!!!
- ‘மிரட்டும் கொரோனா பாதிப்பு’!.. இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘முழு ஊரடங்கு’.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!
- 'இரவு நேரத்தில் முழு ஊரடங்கா'?... 'சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா'?... 'அரசு என்ன சொல்ல போகிறது'... எதிர்பார்ப்பில் மக்கள்!
- ‘ஷூட்டிங் நடத்தலாம், கிரிக்கெட் விளையாடலாம், ஆனா இதை மட்டும் பண்ணக்கூடாதா..?’.. அனில் அம்பானியின் ‘மகன்’ பரபரப்பு கருத்து..!
- ‘வேற வழியே இல்ல’!.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மகாராஷ்டிரா முதல்வர் ‘அதிரடி’ அறிவிப்பு..!