'வயசு 58 ஆச்சு'...'நாங்க காத்திருக்கோம்'...'அரசு வேலைக்கு இத்தனை லட்சம் பேரா'?... பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கால் காசு வருமானம் என்றாலும், அது அரசு வருமானமாக இருக்க வேண்டும் என்ற கூற்றுக் கிராமங்களில் சொல்லப்படுவது உண்டு. அதற்குக் காரணம் அரசு வேலை என்பது நிரந்தரம், மற்றும் ஓய்வு பெறும் வரை பணி நிரந்தரம் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை என்பதும் முக்கிய காரணம் ஆகும். இதனிடையே தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். அவ்வாறு பதிவு செய்வோர் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர தற்போது 18 மாதங்கள் சிறப்புச் சலுகையும் அளிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு தாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 59 ஆயிரத்து 474 பேர். அதேபோல் 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரையில் 13 லட்சத்து 55 ஆயிரத்து 685 பேர் பதிவு செய்து உள்ளனர். 24 முதல் 35 வயது வரை அரசுப்பணி வேண்டிப் பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 55 ஆயிரத்து 160 பேராகும். அதேபோல் 36 முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவு தாரர்கள் 11 லட்சத்து 29 ஆயிரத்து 472 பேர்.
இதனிடையே அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் பட்டியலில் 58 வயதுக்கு மேற்பட்டவர்களும் உள்ளனர். அதில் 7 ஆயிரத்து 648 பேர் பதிவு செய்து வேலைக்காகக் காத்து இருக்கின்றனர். ஆக மொத்தம் 68 லட்சத்து 7 ஆயிரத்து 439 பேர் பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, 1 லட்சத்து 31 ஆயிரத்து 659 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நீங்க 'வீட்டுக்கு' போகலாம்... மொத்தமாக '3000 பேரை'... வேலையை விட்டு நீக்கும் 'பிரபல' நிறுவனம்?
- "இனி மை கன்ட்ரி கைலாசா..." "தமிழ்நாட்டுக்கு 'நோ கம்மிங்...' 'நோ கனெக்ஷன்...'" "முடிஞ்சா கைலாசா வந்து என்னை மீட் பண்ணுங்க..."
- 'வெளிநாட்டு' வேலைக்கு போறவங்க... 'கண்டிப்பா' இதெல்லாம் செய்யணும்... முக்கிய அறிவிப்பு!
- 'மொத்தமாக' 35 ஆயிரம் பேரை... வீட்டுக்கு அனுப்பும் 'முன்னணி' நிறுவனம்... கலக்கத்தில் ஊழியர்கள்!
- 'துணை முதல்வர்' என்ன 'மாடு' பிடி வீரரா?... 'துரைமுருகன்' கேள்வியால் சட்டப்பேரவையில் 'சிரிப்பொலி'... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' கொடுத்த 'விளக்கம்...!'
- 'சண்ட போட்டு சலிச்சு போச்சு'... மனைவியை ரிவெஞ்ச் எடுக்க... கணவன் செய்த காரியம்... போலி சான்றிதழ் விவகாரத்தால்... மதுரையில் பரபரப்பு!
- ‘இந்த மாஸ்க்க போடுங்க’.. ‘கொரோனா வைரஸ் கிட்டகூட வராது’.. அசத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயர்..!
- 'அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றப்படுமா?'... 'அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்'... விவரம் உள்ளே!
- 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்'... 'தமிழகத்தின் நிலை என்ன?'... 'மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்!"...
- 'இந்த விஷயத்துல இவங்க தான் பர்ஸ்ட்'... 'ஐடி ஊழியர்கள் இரண்டாவது'... 'வெளியான அதிர்ச்சி தகவல்'!