'கோவில் குடமுழுக்கு விழாக்களில்’... ‘இனிமேல் தமிழ் மொழியிலும்’... ‘உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழாக்களில் கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், கரூர் கல்யாணபசுபதிஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கு குறித்து கோயில் நிர்வாகத்தினர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு கோயில் நிர்வாகம் பதில் தராததையடுத்து நீதிமன்றத்தில் ரமேஷ் மனுவிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிகளில் குடமுழுக்கு நடத்துவதில் ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இனிவரும் காலங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் தமிழிலில் குடமுழுக்கு நடத்தாவிடில் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்