இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1, புதிய நிறுவனங்களில் 60 % தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் எம்.சி. சம்பத் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

2, டெல்லி: ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பங்கேற்றார்.

3, மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

4, ‘வருமானம் அதிகரிக்கும்போது விலைவாசி உயர்வு இருக்கும்தான். தற்போது அனைத்து ஷாப்பிங் மால்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியபடி தான் உள்ளது. விலைவாசி உயர்வை அந்த ஆண்டவனே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

5. 43 -வது சென்னை புத்தக கண்காட்சி நாளைய தினம், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

TODAY, NEWS, HEADLINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்