தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்களுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது.. தமிழ்நாடு விழாவில் வழங்கி ‘கௌரவித்த’ முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 25.7.2014 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் வளர்ச்சிக்காகத் தனி ஆளாகத் தொண்டு செய்தும், தமிழ் அமைப்பு வைத்துத் தமிழ் மொழிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்றவாறு வழங்கப்படும் என்றும், இவ்விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான விருதுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி 2019ம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருது 37 தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் 19 விருதாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று தமிழ்ச் செம்மல் விருது, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார். தமிழ்ச் செம்மல் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட இதர விருதாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் அமைச்சர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2022 வரை இந்த சலுகை'...'கார் வாங்க இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம்'... தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி வரிவிலக்கு!
- 'முதல்வரது தாயாரின் இறுதி சடங்குக்காக.. காரில் சென்றபோது துரைக்கண்ணுவுக்கு நடந்தது என்ன?'.. காலமான வேளாண் அமைச்சருக்கு முதல்வர் அஞ்சலி!
- 'என்ன பசங்களா... லாக்டவுன் நல்லா இருந்துச்சா?.. ஸ்கூல், காலேஜுக்கு போவோமா?'.. 'காலேஜ் திறந்ததும்... தியேட்டரும் திறக்கணும்ல!?'.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- ‘மருத்துவ படிப்பு, நீட் விவகாரத்தில் .. 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கோரிய தமிழக அரசு!’ - தமிழக ஆளுநர் ‘அதிரடி!’
- “ஏழை மாணவர்களின் நலன் கருதி..” .. ‘நீட் தேர்வு தொடர்பாக’- தமிழக முதல்வர் பிறப்பித்த ‘அதிரடி’ ஆணை! அமைச்சர் செங்கோட்டையனின் ‘கூடுதல்’ அறிவிப்பு!
- 'கல்லூரி முடித்ததும் உதவி தொகை'...'இளம் வழக்கறிஞர்களுக்கு அசத்தலான திட்டம்'... தொடங்கிவைத்த முதல்வர்!
- 'என்னோட உயிருக்கு ஆபத்து'... 'முதல்வர் உதவ வேண்டும்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல இயக்குநரின் ட்வீட்!
- 'மக்களிடம் எழுந்துள்ள கேள்விகள்'...'எதற்கெல்லாம் அனுமதி'?... 'என்னென்ன தளர்வுகள்'... 28ந்தேதி முதலமைச்சர் ஆலோசனை!
- கொரோனா தடுப்பூசி குறித்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' அறிவிப்பு!.. "வைரஸ் பற்றி தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதால்"... இந்த முடிவு!?
- 'உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு'... திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!