‘நான் மாரியம்மா வந்திருக்கேன்’ ‘10 வருஷமா மூடியிருந்த கோயில்’ திறக்கப் போன தாசில்தார் அருள் வந்து ஆடியதால் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரத்தில் பல வருடங்களாக மூடியிருந்த கோயிலை, நீதிமன்ற உத்தரவின்படி திறக்க சென்ற தாசில்தார் அருள் வந்து சாமி ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் வாலிநோக்கம் அருகே உள்ள மேலக்கிடாரம் கிராமத்தில் பழமையான திருவடி அய்யனார் மற்றும் உய்யவந்த அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் 10 வருடங்களாக கோயில் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் மூடியிருக்கும் கோயிலைத் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து கோயிலைத் திறப்பதற்காக கடலாடி தாசில்தார் முத்துக்குமார் போலீசாருடன் சென்றுள்ளார். அப்போது கோயிலைத் திறக்கச் சென்ற தாசில்தார் முத்துக்குமார் திடீரென அருள் வந்து ‘நான் மாரியம்மா வந்திருக்கேன்.. மஞ்ச பால் கொடு’ என சாமி ஆடியுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்த பெண்களும் அருள் வந்து சாமி ஆடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு மஞ்ச பால் கொடுக்கப்பட்டது. அதனை கோயிலுக்குள் தெளித்து தாசில்தார் முத்துக்குமார் சாந்தமடைந்தார். பின்னர் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சிந்துவை கல்யாணம் பண்ண போறேன்’ ‘அதுக்கான எல்லாம் தகுதியும் என்கிட்ட இருக்கு’ அதிர வைத்த முதியவர்..!
- 'இந்த 2 பெண் ஊழியர்கள்தான் பொறுப்பு'.. 'என் மகள பாத்துக்கங்க'.. பஸ் பணிமனை ஊழியரின் தற்கொலைக் கடிதம்!
- ‘366 கிலோ மீட்டர், 6 மாவட்டங்கள்’.. 4 மணிநேரத்தில் கடந்து சிறுவன் உயிரை காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்..! குவியும் பாராட்டுக்கள்..!
- 'ஆசையாக மனைவி கொடுத்த உணவை'... 'நம்பி சாப்பிட்ட கணவனுக்கு'... 'கடைசியில் காத்திருந்த பயங்கரம்'!
- பழனி பஞ்சாமிர்த கடைகளில் திடீர் வரிமான வரி சோதனை..! பக்தர்கள் மத்தியில் பரபரப்பு..!
- ‘ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி’.. ‘திருப்பதி கோயிலில் இனி’..
- 'இது சரி வராது'...'போட்டோவ நெட்ல போட வேண்டியது தான்'... செல்போன் கடைக்கு போன பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- ‘சென்னை அருகே’.. ‘கோயிலுக்குள் மர்மப்பொருள் வெடித்ததில் 2 இளைஞர்கள் பலி’.. ‘தீவிரவாத அச்சுறுத்தலோ’ என பரபரப்பு..
- ‘கோயில் சுவர் இடிந்து விழுந்து’.. ‘6 பேர் பலியான பரிதாபம்’.. ‘கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் நடந்த சோகம்’..
- ‘திடீரென குறுக்கிட்ட டூ வீலர்’... ‘தடுப்பு சுவர் மீது மோதி’... 'நடந்த கோர விபத்து'!