'நீங்களே பாருங்க, எங்க செயல்பாடு பேசும்'... 'தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றார் 'சைலேந்திர பாபு ஐபிஎஸ்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக சி.சைலேந்திர பாபு நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி இன்று (புதன்கிழமை) ஓய்வு பெற்றார். அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனத்திலும் சரி, ஐ.பி.எஸ்.அதிகாரிகள் நியமனத்திலும் சரி தலைசிறந்த அதிகாரிகளையே தேர்வு செய்து பணி அமர்த்தி உள்ளார்.

அந்த வகையில் திறமை மிக்க சைலேந்திரபாபுவை தமிழகக் காவல்துறையில் உயர்ந்த பதவியான டி.ஜி.பி.பதவியில் அமர்த்தி அவர் அழகு பார்த்துள்ளார். அவரது பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். சைலேந்திரபாபு பன்முக திறமை வாய்ந்தவர். தலைசிறந்த தொழில் முறையிலான அதிகாரி ஆவார். சட்டம்-ஒழுங்கை கையாள்வதிலும் சரி, ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, நிர்வாகம் மற்றும் ஆளுமை திறமையிலும் சரி, போலீஸ், பொதுமக்கள் நலத்தைப் பேணுவதிலும் சரி அவருக்கு, நிகர் அவரே.

நல்ல பேச்சாளர். இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி. போதிய அதிகாரம் இல்லாத பதவியில் அவர் நியமிக்கப்பட்ட போதும், அவர் துவண்டு போகாமல் அதில் கூட சாதித்துக் காட்டி உள்ளார். இந்நிலையில் சைலேந்திரபாபு தமிழகத்தின் 30-வது டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த சைலேந்திரபாபுவிற்கு காவல்துறை பேண்ட் வாத்திய குழுவினர் வரவேற்பு அளித்தனர்.

/>இதையடுத்து காவல்துறை தலைமை இயக்குநர் அறைக்குச் சென்ற சைலேந்திரபாபு, முறைப்படி டிஜிபியாக பதவியேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையினர் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கு காவல்துறையினருக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும் எனக் கூறிய சைலேந்திரபாபு, காவல்துறையினரின் நலனும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் எங்கள் செயல்பாடுகள் பேசும் என சைலேந்திரபாபு தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்