'தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்'... தமிழக அரசு அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகக் காவல்துறை சட்ட ஒழுங்கு டிஜிபி (HOPF) திரிபாதி நாளையுடன் ஓய்வுபெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்த நிலையில் யூபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து அரசு அறிவித்துள்ளது.
தமிழகக் காவல்துறையில் உயரிய பதவி, சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி. தீயணைப்புத் துறை, சிபிசிஐடி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை எனப் பல டிஜிபிக்கள் பதவியிலிருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் பதவி முக்கியமானது.
இந்தப் பதவிக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரியைத் தமிழக அரசு நேரடியாகத் தேர்வு செய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு தேர்வாணையத்துக்கு (யூபிஎஸ்சி) சமர்ப்பித்து அவர்கள் அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவரைத் தேர்வு செய்ய முடியும். இது உச்ச நீதிமன்ற உத்தரவு. அப்படித் தேர்வு செய்யப்படுபவர் அடுத்த 2 ஆண்டுகளுக்குக் கட்டாயம் பதவியில் இருப்பார்.
தற்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபி நாளையுடன் ஓய்வு பெறுவதால் தற்போதுள்ள டிஜிபிக்களில் தகுதியுள்ள 7 பேர் பட்டியல் யூபிஎஸ்சி பார்வைக்குச் சென்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கத் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், தற்போதைய சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் டெல்லி சென்றனர்.
அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி பட்டியலில் 7 அதிகாரிகள் பெயர் அனுப்பப்பட்டது. 1. ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, 2. மத்திய அயல் பணியில் உள்ள சஞ்சய் அரோரா, 3. தீயணைப்புத் துறை டிஜிபி கரன் சின்ஹா, 4. சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், 5. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, 6. சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், 7. டான்ஜெட்கோ டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 7 பேர் ஆவர்.
இந்நிலையில் சைலேந்திர பாபுவை புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி, தற்போது ரயில்வே டிஜிபியாக பதவி வகிக்கிறார். காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி சட்டம், ஒழுங்குப்பிரிவிலும் அதிக அனுபவம் உள்ளவராவார். புதிய டிஜிபி நாளை பகல் 12 மணி அளவில் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த பொண்ண ஞாபகம் இருக்கா'... 'போலீஸ் உடையில் பார்த்ததும் வாயடைத்து போன உறவினர்கள்'... வாழ்க்கையை புரட்டி போட்ட அதிரடி சம்பவம்!
- 'தொடர்ந்து அவதூறு மற்றும் ஆபாச விமர்சனம்'... 'கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ்'... காவல்துறை அதிரடி!
- 'ஒரே பிரசவத்தில்... 10 குழந்தைகள்' பெற்றெடுத்ததாகக் கூறிய பெண் கைது!.. பூதாகரமான விவகாரம்!.. மெல்ல அவிழும் மர்ம முடிச்சுகள்!
- 'ஒரு லட்சம் subscribers!.. முடக்கப்பட்ட Toxic Madan 18+ யூடியூப் சேனலில் புதிய அப்டேட்'!.. சென்னை காவல்துறை Thug life சம்பவம்!
- 'கடும் தட்டுப்பாடு'!.. 800 கிலோ மாட்டு சாணம் திருட்டு!.. பின்னணி யார்?.. வழக்குப் பதிவு செய்து காவல்துறை தேடுதல் வேட்டை!
- 'போலீசிடம் சிக்கி நொந்து நூடுல்ஸ் ஆக வந்த 'மதன்'... 'என்ன Bro நீங்க, இத பண்ணி எஸ்கேப் ஆகியிருக்கலாம்'... நெட்டிசன் கொடுத்த அல்டிமேட் ஐடியா!
- 'போட்டோஷாப் பண்ண ஸ்கூல் போட்டோ'... 'VPN வச்சு சித்து விளையாட்டு'... 'போலீஸ் எல்லாம் சும்மா Bro என சவடால் விட்ட மதன் சிக்கியது எப்படி'?... சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சேசிங்!
- 'என்னங்க சொல்றீங்க'... 'ஒரு மாச வருமானம் இத்தனை லட்சமா'?... 'மனைவி சொன்ன பல அதிர்ச்சி தகவல்கள்'... தோண்ட தோண்ட வரும் ரகசியம்!
- 'வேலைக்கு போக வேண்டாம்'... 'இத மட்டும் செஞ்சா சீக்கிரம் செட்டில் ஆகலாம்'... 'காதல் ஜோடி' போட்ட விவகாரமான பிளான்!
- 'ஒரு கோடி இரண்டு கோடி இல்ல சார், 100 கோடி'... 'பரிதவித்து நிற்கும் தொழிலதிபர்கள்'... ஹரிநாடார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!