'குடும்பத்தோட இல்ல.. தனியாவே வரேன்.. ஆனா'.. நித்தியானந்தாவிடம் எஸ்.வி.சேகர் வைத்த 'வித்தியாசமான' நிபந்தனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தலைமறைவான நித்தியானந்தா ஈக்வடார், கரிபியன் தீவுகளில் இருப்பதாக மாறி மாறி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. நித்தியானந்தாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல வகையான கருத்துக்களை பலரும் தெரிவித்துவரும் நிலையில், நித்தியானந்தாவோ அவ்வப்போது சூடான பல வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

முன்னதாக தனது மகள்களை நித்தியானந்தா கடத்திவிட்டதாக ஜனார்த்தனன் சர்மா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அவரது மகள்களோ தாங்கள் அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் இருப்பதாகவும், தந்தையுடன் செல்வதற்கு தங்களுக்கு விருப்பமில்லை என்றும் வீடியோ பதிவு வெளியிட்டனர். அதே சமயம், தந்தை ஜனார்த்தன சர்மாவால், அவரது மகள்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், ஜனார்த்தனாவின் மகள்களின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நித்தியானந்தா தன்னை விட ஞானஸ்தர் என்றும் அவரிடம் மிகப்பெரிய ஹீலிங் சக்தி இருக்கிறது என்றும் எஸ்.வி.சேகர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், நித்தியானந்தா கைலாசா என்கிற இந்து தேசத்தை ஸ்தாபித்தால், தான் குடும்பத்துடன் அங்கு செல்வதில் எவ்வித கூச்சமும் தனக்கில்லை என்றும் கூறியிருந்த எஸ்.வி.சேகர், தற்போது தனக்கு மனைவி, குழந்தைகள் பேரன், பேத்தி இருப்பதனால் கைலாசாவுக்கு தனியாக வந்து செல்வதாகவும், அதோடு தன்னை கைலாசாவுக்கு பிரதமர் ஆக்கினால் அவ்வப்போது வந்து செல்லலாம் என்றும் எஸ்.வி.சேகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நமது கை மனம் வீசுவதும், நாற்றம் வீசுவதும் நாம் கையால் தொடும் பொருளை பொறுத்து தான் என்று கூறிய எஸ்.வி.சேகர் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பேச தான் பணம் ஏதும் வாங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் இப்படியிருக்க, வரும் 18 -ஆம் தேதிக்குள் நித்தியானந்தா இருப்பிடம் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கும், காவல்துறைக்கும் பெங்களூரு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்